கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்ம சாவு


கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 29 April 2022 5:58 PM IST (Updated: 29 April 2022 5:58 PM IST)
t-max-icont-min-icon

கேளம்பாக்கம் அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரது கணவரை தேடி வருகின்றனர்.

வீட்டில் இருந்து துர்நாற்றம்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மேலக்கோட்டையூர் கிராமம் பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 42). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜேஸ்வரி (37) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று கணேசனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் குடியிருந்தவர்கள் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக கிடந்தார்

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கழுத்து நெரிக்கப்பட்டு, ஆடை அலங்கோலமாக கலைக்கப்பட்டு அழுகிய நிலையில் ரத்தக்காயங்களுடன் ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் ராஜேஸ்வரி திருமணம் முடிந்து முதல் கணவர் கைவிட்ட நிலையில் 2-வது கணவருடன் திருமணம் முடிந்து கடந்த 6 மாத காலமாக வாழ்ந்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவருக்கு வலைவீச்சு

போலீசார் கணேசனின் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கடந்த 24-ந் தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதன் பிறகு வீடு பூட்டியே கிடப்பதாகவும் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் கணேசனை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story