நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்
நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்
அன்னூர்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள் பாட்டி(வயது85). இவர் எம்.ஜி.ஆர். நடித்த விவசாயி படத்தில் அறிமுகமாகி, சிவாஜி, ஜெயலலிதா உள்பட அப்போதைய பிரபல நடிகர்கள் முதல் தற்போதைய அஜித், விஜய் உள்பட நடிகர்களின் படங்கள் என இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர்.
இது தவிர நடிகர் வடிவேலுடன் நடித்த படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் வறுமையின் சூழலில் சிக்கிய ரங்கம்மாள் பாட்டிக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. ஒரு சிமெண்ட் சீட் வைத்து மறைக்கப்பட்ட வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். கூலி தொழிலாளியான அவரது சகோதரிதான் அவருக்கு உணவு அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று உடல்நல குறைவால் ரங்கம்மாள் பாட்டி காலமானார்.
Related Tags :
Next Story