அரிசி ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது


அரிசி ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 April 2022 4:56 PM GMT (Updated: 29 April 2022 4:56 PM GMT)

அரிசி ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆலாங்கடவு பிரிவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 20 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அரிசி ஆலை உரிமையாளர் விவேக், லாரி டிரைவர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளர் விவேக்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் கோபிநாத் மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story