உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலையின் கீழ் பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் செல்கிறது. டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பதிக்கப்பட்ட குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்றது. இது தொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அங்கு கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் ஆர்.கதிர்வேல், செயல் அலுவலர் அப்துல்லா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி, குழாய் உடைப்பை சரி செய்ய விரைந்து நடவடிக்ைக எடுத்தனர். பின்னர் கிணத்துக்கடவு பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.கதிர்வேல் கூறும்போது, பிளாஸ்டிக் குழாய் என்பதால் சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது உடைப்பு ஏற்படுகிறது. அதை மாற்றி இரும்பு குழாய் அமைப்பதோடு விரைவாக நிலம் கையகப்படுத்தும் பணியை முடித்து சாலையோரத்துக்கு கொண்டு செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முன்வர வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story