சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை
சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த பெண், தீப்பெட்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது.
அந்த சிறுவன், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாட செல்வது வழக்கம். இதற்காக அந்த பெண் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதை மீறி அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது மகனின் உடலில் சூடு வைத்தார். இதில் அந்த சிறுவனின் கை, கால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோட்டூர் போலீசாருக்கும், கோவை மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து அந்த சிறுவனை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தாயை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு போலீசில் புகார் கொடுக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story