சிலிண்டர் வெடித்து வாலிபர் படுகாயம்
வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பொள்ளாச்சி
வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்து வாலிபர் படுகாயம் அடைந்தார்.
சிலிண்டர் வெடித்தது
பொள்ளாச்சி அருகே ஜமீன்முத்தூரில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள ஓட்டு வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகுமார்(வயது 27) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர் திருப்பூரில் இருந்து பனியன் கழிவுகளை எடுத்து வந்து, அதை மறு சுழற்சி செய்து பொள்ளாச்சி பகுதியில் விற்பனை செய்து வருகிறார். அந்த வீட்டின் சமையல் அறையில் 6 காலி சிலிண்டர்களும், ஒரு கியாஸ் நிரப்பட்ட சிலிண்டரும் இருந்தது.
இந்த நிலையில் வீட்டில் இன்று மதியம் சமைக்கும்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் தீப்பிடித்து வெடித்தது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் தீக்காயங்களுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்.
ஒரு மணி நேர போராட்டம்
இதற்கிடையில் பனியன் கழிவுகள் மீது தீ வேகமாக பரவ தொடங்கியது. மேலும் சிலிண்டர் வெடித்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
படுகாயமடைந்த கிருஷ்ணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story