கர்நாடகா: புதிய வீட்டுக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டிய பா.ஜனதா தொண்டர்...!!!


கர்நாடகா: புதிய வீட்டுக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டிய பா.ஜனதா தொண்டர்...!!!
x
தினத்தந்தி 29 April 2022 9:55 PM GMT (Updated: 2022-04-30T03:25:43+05:30)

தனது மகளுக்காக கட்டிய புதிய வீட்டுக்கு பா.ஜனதா தொண்டர் ஒருவர் பிரதமர் மோடியின் பெயரை சூட்டிய சம்பவம் தாவணகெரேயில் நடந்துள்ளது.

சிக்கமகளூரு:

பா.ஜனதா தொண்டர்

  கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ெசன்னகிரி டவுன் ககதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹாலேஸ். பா.ஜனதா தொண்டரான இவர், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவரது மகள் திருமணம் முடிந்து ஆஸ்திரேலியாவில் தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஹாலேஸ், தனது மகளுக்காக ஒரு மாடி வீடு கட்ட முடிவு செய்தார். அதன்படி அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு புதிய மாடி வீடு கட்டி வந்தார்.

  இந்த நிலையில் வீடு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடத்த ஹாலேஸ் திட்டமிட்டுள்ளார்.

புதிய வீட்டுக்கு மோடியின் பெயர்

  இதற்கிடையே புதிதாக கட்டிய வீட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்ட முடிவு செய்தார். இதையடுத்து அவர், மகளுக்காக கட்டிய புதிய வீட்டிற்கு நரேந்திர மோடி நிலையம் என பெயர் சூட்டியுள்ளார்.

  அதாவது வீட்டு முன்பு கன்னட மொழியில் நரேந்திர மோடி நிலையம் என பெயரிட்ட கல்வெட்டை பதித்துள்ளார். பின்னர் வீட்டு முன்பு மோடியின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

பெருமை அளிக்கிறது

  ஹாலேஸ், புதிதாக கட்டிய வீட்டிற்கு பிரதமர் மோடி பெயரை சூட்டி, அவரது புகைப்படத்தை வைத்துள்ள பொதுமக்கள் வியந்து வந்து பார்த்து செல்கின்றனர். ஹாலேசின் புதிய வீடு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன். அதனால் புதிய வீட்டிற்கு அவரது பெயரை வைத்துள்ளேன். இது தனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது’ ஹாலேஸ் தெரிவித்துள்ளார்.

Next Story