ஜல்லிப்பட்டியில் பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


ஜல்லிப்பட்டியில் பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 30 April 2022 8:20 PM IST (Updated: 30 April 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து ஜல்லிப்பட்டியில் பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுல்தான்பேட்டை

நாட்டில் தற்போது டீசல், ஆயில் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல பொக்லைன் உதிரிபாகங்களின் விலை மற்றும் இன்சூரன்ஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் பொக்லைன் உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில் டீசல், ஆயில், உதிரிபாகங்கள் விலையை உயர்வை கண்டித்து நேற்று சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி மற்றும் அருகில் உள்ள கேத்தனூர், வாவிபாளையம் பகுதியை சேர்ந்த பொக்லைன் உரிமையாளர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

 இதனால் அவர்கள் வாவிபாளையம் பிரிவில் பொக்லைன் எந்திரங்களை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்த போராட்டத்தில் வாகன உரிமையாளர்கள், ஆபரேட்டர், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் டீசல், ஆயில் விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26, 27, 28-ந் தேதிகளில் சுல்தான்பேட்டையில் பொக்லைன் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story