ஆனைமலை அருகே கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை
ஆனைமலை அருகே கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஆனைமலை
ஆனைமலை அருகே உள்ள திவான்சாபுதூர் புதுக்காலனியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. நாச்சிமுத்து சம்பள பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மதுகுடித்து வந்ததாகவும், அதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்த நாச்சிமுத்து, சம்பவத்தன்று சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனக்குக்தானே கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக்கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாச்சிமுத்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story