ஜெயலலிதா உதவியாளரிடம் 2-வது நாளாக விசாரணை


ஜெயலலிதா உதவியாளரிடம் 2-வது நாளாக விசாரணை
x
ஜெயலலிதா உதவியாளரிடம் 2-வது நாளாக விசாரணை
தினத்தந்தி 30 April 2022 3:09 PM GMT (Updated: 2022-04-30T20:39:55+05:30)

ஜெயலலிதா உதவியாளரிடம் 2-வது நாளாக விசாரணை

கோவை


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பி, அவர்களை கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றனிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையில் நேற்று முன்தினம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் பூங்குன்றனிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 7 மணி வரை நீடித்தது. இந்த விசாரணையின் போது தனிப்படையினர் பூங்குன்றனிடம், கோடநாடு கொள்ளை சம்பவத்தில் யார்மீதாவது சந்தேகம் உள்ளதா?, பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை யார் சரிபார்ப்பார்கள், யார் கட்டுப்பாட்டின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை  கேட்டு விசாரணை நடத்தினர்.

Next Story