ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவை
கோவை கணபதி விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் சின்னப்பா என்ற கண்ணன் (வயது 39). இவர் ரேஷன் அரிசி கடத்தியதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் சின்னப்பா தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் மாநகர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் ரேஷன் அரிசி கடத்தி வந்த சின்னப்பா என்ற கண்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள சின்னப்பாவிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story