குடிபோதையில் தகராறு; 3 வாலிபர்கள் கைது


குடிபோதையில் தகராறு; 3 வாலிபர்கள் கைது
x
குடிபோதையில் தகராறு; 3 வாலிபர்கள் கைது
தினத்தந்தி 30 April 2022 8:50 PM IST (Updated: 30 April 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தகராறு 3 வாலிபர்கள் கைது

இடிகரை

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென அவர் மீது மோதிவிட்டு, அருகில் நின்ற தனியார் பஸ் மீதும் மோதியது. 

உடனே சரவணன் மற்றும் தனியார் பஸ் டிரைவர் ஆகியோர் இணைந்து, அந்த காரை மறித்து அதில் இருந்த 3 வாலிபர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு சரவணன்(31), ஊட்டியை சேர்ந்த சந்தோஷ்(32) மற்றும் பரமேஷ்(33) ஆகியோர் என்பதும், குடிபோதையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

Next Story