13 கிலோ கஞ்சா பறிமுதல் 2பேர் கைது


13 கிலோ கஞ்சா பறிமுதல் 2பேர் கைது
x
13 கிலோ கஞ்சா பறிமுதல் 2பேர் கைது
தினத்தந்தி 30 April 2022 8:53 PM IST (Updated: 1 May 2022 2:35 PM IST)
t-max-icont-min-icon

13 கிலோ கஞ்சா பறிமுதல் 2பேர் கைது

கோவை


இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னா ரெயில் நிலையில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரெயில் நேற்று காலை 10.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் அந்த ரெயிலில் ஒவ்வொரு ரெயில் பெட்டியாக சென்று சோதனை செய்தனர்.

இதில் ஜெனரல் பெட்டியில் உள்ள கழிப்பறை அருகே ஒரு மூட்டை கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 5 பார்சல்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை சுங்கம் பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அம்மன்குளம் ஏரிமேட்டை சேர்ந்த நவீன் (வயது 24) என்பவர் அங்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கோவை மணியக்காரம்பாளையம் விறகு கடை பஸ் நிறுத்தம் அருகே சரவணம்பட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கோவை கணபதியை சேர்ந்த சம்சுதீன் (25) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Next Story