இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2022 1:13 PM IST (Updated: 1 May 2022 1:13 PM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 35), இவருடைய மனைவி சுபலட்சுமி (29), இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும் 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதே பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை சார்பில் அனைவருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிகாரிகள் சார்பில் நேற்று முன்தினம் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியை அகற்றுவதற்காக அதிகாரிகள் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டதால் வீட்டை இடித்து அகற்றி விடுவார்களோ என்று சுபலட்சுமி கவலை அடைந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று சுபலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சுபலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story