திண்டுக்கல் சவேரியார்பாளையம் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா


திண்டுக்கல் சவேரியார்பாளையம் மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 1 May 2022 10:10 PM IST (Updated: 1 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் சவேரியார்பாளையம் மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீர்த்தகுடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் சவேரியார்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. 7 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் முதல் நாளான நேற்று அதிகாலை 5 மணி அளவில் அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்டு குடகனாற்றில் தீர்த்தவாரி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடங்களுடன் மாகாளியம்மன் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்த குடங்களுடன் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அதையடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க தீர்த்த குடங்களுடன் மாகாளியம்மன் புறப்பட்டு சவேரியார்பாளையம் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் அம்மன் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story