கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்
கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வடபுதூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்று வடபுதூர் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராம சபை கூட்டம்
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட வடபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணம்மாள் அம்மையப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் வடிவேல் தீர்மானங்களை வாசித்தார். 100 நாள் வேலைத்திட்டம், வேளாண் துறை திட்டங்கள், மானியம், ஊராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டம்,
குழந்தை திருமணம் ஒழிப்பு, கிணத்துக்கடவு ரெயில் நிலைய பகுதியை பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலம் கோட்டத்துக்கு மாற்றுவது, அனைத்து விரைவு ரெயில்களும் கிணத்துக்கடவில் நின்று செல்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஊராட்சியின் வரவு- செலவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் அனைத்து வீடுகளிலும் கட்டப்பட்டுள்ள கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
சலாம்பாளையம்
இதேபோன்று கோடங்கிபாளையம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம், தேவரடிபாளையத்தில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
செயலாளர் ராணி தீர்மானங்களை வாசித்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சலாம்பாளையத்தில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் முத்துசாமி தீர்மானங்களை வாசித்தார்.
கோவில்பாளையம்
கோதவாடியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பரமசிவம் மற்றும் செயலாளர், வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாக்கியம் முன்னிலை வகித்தார். செயலாளர் தெய்வசிகாமணி தீர்மானங்களை வாசித்தார்.
Related Tags :
Next Story