குட்டையில் மூழ்கி சிறுவன் பலி


குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
x
தினத்தந்தி 1 May 2022 10:13 PM IST (Updated: 1 May 2022 10:13 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்.

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்.

8 வயது சிறுவன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோம்பங்காட்டுபுதூரை சேர்ந்தவர் சவுந்திரராஜன். விசைத்தறி தொழிலாளி. இவரது தங்கை விஜயலட்சுமி சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையத்தில் வசித்து வருகிறார். அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. 

இதனால் விஜயலட்சுமியை பார்க்க சவுந்திரராஜன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் இன்று மதியம் எஸ்.குமாரபாளையத்துக்கு வந்திருந்தார். 
இந்த நிலையில் சவுந்திரராஜனின் மகன் ரோகன்(வயது 8), மகள் தன்யா மற்றும் தங்கை மகள் கீர்த்திகா ஆகியோர், அங்குள்ள தோட்டத்தை சுற்றி பார்க்க சென்றனர். 

உடல் மீட்பு

அப்போது தோட்டத்தில் உள்ள குட்டையில் கால் கழுவ ரோகன் சென்றான். ஆனால் திடீரென தவறி குட்டைக்குள் விழுந்துவிட்டான். தண்ணீரில் மூழ்கி அவன் தத்தளிப்பதை கண்ட தன்யா மற்றும் கீர்த்திகா உடனடியாக மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அது முடியாமல் போனது. 

இதனால் சிறிது நேரத்திலேயே ரோகன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு வந்த பெற்றோரிடம், சிறுமிகள் நடந்தை கூறினர். உடனே அவர்கள் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வீரர்கள், ரோகனின் உடலை மீட்டனர். பின்னர் சுல்தான்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story