ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
ஆனைமலை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.1½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிரடி சோதனை
தமிழகத்தில் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கோவை மாவட் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிிரிவு துணை சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில் பேரூர் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆனைமலையை அடுத்த காளியாபுரம் கந்தசாமி கவுண்டர் வீதியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பெட்டி, பெட்டியாக...
அப்போது அந்த வீட்டில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அது தொடர்பாக சரோஜினி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அவரது மகன் திருமலைசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். அதிரடி நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story