புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி
வால்பாறை அருகே புனித சூசையப்பர் ஆலய தேர் பவனி நடந்தது.
வால்பாறை
வால்பாறை அருகே சோலையாறு அணை பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு, ஜெபமாலை வழிபாடு ஆகியவை நடைபெற்றது. மே தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, லிவிங்ஸ்டன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
தேர் திருவிழாவையொட்டி சோலையாறு நகர் பஜார் பகுதியில் இருந்து புனித சூசையப்பர் சொரூபத்துடன் கூடிய தேர்பவனி மளுக்கப்பாறை பகுதி வரை நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி பவனியாக சென்றனர்.
தேர்பவனி ஆலயத்தை வந்தடைந்ததும் சிறப்பு ஜெபவழிபாடு மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
வால்பாறை, சேக்கல்முடி, முருகாளி, பெரியார் நகர், மளுக்கப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தேர்பவனியில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story