கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை


கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை
x
தினத்தந்தி 2 May 2022 10:39 PM IST (Updated: 2 May 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

கோவை கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தின் போது கோர்ட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் மே 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோர்ட்டுகளுக்கு கோடை கால விடுமுறை அறிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்ட முதன்மை செசன்சு, கூடுதல் செசன்சு கோர்ட்டுகள், முன்சிப் கோர்ட்டுகளில் விசாரணை நடைபெறாது. அதேநேரத்தில் சி.ஜே.எம். கோர்ட்டு, மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள், சிறப்பு கோர்ட்டுகள், விரைவு கோர்ட்டுகள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.

மாவட்ட முதன்மை செசன்சு  கோர்ட்டு செயல்படாததால் விடுமுறை கால கோர்ட்டு செயல்படும். இதில் வாரம் ஒருமுறை ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும். இதற்காக கோடைகால விடுமுறை கோர்ட்டு நீதிபதியாக குலசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். சிவில் வழக்குகளை விசாரிக்க முதன்மை சார்பு நீதிபதி சஞ்சீவ் பாஸ்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Next Story