தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 2 May 2022 10:56 PM IST (Updated: 2 May 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

சூலூர் அருகே கல்குவாரியில் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

கருமத்தம்பட்டி

கோவை பீளமேட்ைட சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 15). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஹரிஹரன் நேற்று முன்தினம் தனது நண்பர்களான தினேஷ், சுமன், மகேஷ், கீர்த்திக், பூவரசன் ஆகியோருடன் சேர்ந்து சூலூரை அடுத்த பட்டணத்தில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளனர். 

அப்போது, சுமன், கிர்த்திக் ஆகிய 2 பேரும் நீச்சல் தெரியாததால் குளிக்கவில்லை. மற்ற 4 பேரும் கல்குவாரியில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹரிஹரன் ஆழமான பகுதிக்கு சென்ற தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் தத்தளித்தப்படி மூழ்க தொடங்கினான்.

 இதனைக்கண்ட சகநண்பர்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். அதற்கு அவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதற்கிடையில் மாணவர்களின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர்.

 மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சூலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கல்குவாரி தண்ணீரில் மூழ்கிய ஹரிஹரனை தேடினர். ஆனால் இரவு ஆனால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. 

நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவன் ஹரிஹரன் பிணமாக மீட்டகப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story