மள்ளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


மள்ளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 May 2022 10:57 PM IST (Updated: 2 May 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் அகில இந்திய மள்ளர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

அகில இந்திய மள்ளர் பேரவையினர் சார்பில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை எஸ்.சி. பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றி ஒ.பி.சி. பிரிவில் சேர்த்திட வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டம் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில், தேவேந்திர குல வேளாளர் சமூகம் மற்றும் இந்திரசேனா அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

Next Story