வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் 5-ந்தேதி மூடல்


வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் 5-ந்தேதி மூடல்
x
தினத்தந்தி 3 May 2022 5:31 AM IST (Updated: 3 May 2022 9:25 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் 5-ந்தேதி மூடல் வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு.

சென்னை,

சென்னை கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வணிகர் தினமான வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை), கோயம்பேடு வணிக வளாகத்தில் வியாபாரிகள் அனைவரும் தங்கள் கடைகளை அடைத்து, வணிகர் தின ஒற்றுமையை பறைசாற்றுகிறார்கள். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் நடத்தும் வணிகர் தின மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் கோயம்பேடு வியாபாரிகள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் கோயம்பேடு மார்க்கெட் மேம்பாட்டு பணிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். கோயம்பேடு மார்க்கெட் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்ததற்காக நினைவு பரிசு வழங்குகிறோம். கோயம்பேடு மார்க்கெட் தவிர அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தவிலைக்கு காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், இதனை தடுக்க முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூட்டமைப்பு நிர்வாகிகள் எம்.டி.ஆர்.தியாகராஜன், சீனிவாசன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story