குன்றத்தூர் வட்டாரத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஆட்டோக்கள் பறிமுதல்
குன்றத்தூர் வட்டாரத்தில் தகுதிச்சான்று புதுப்பிக்காத ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி,
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாகனங்களின் தகுதிச்சான்று புதுப்பிக்க 2 ஆண்டுகள் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்தது. ஆனால் அரசு கொடுத்த கால அவகாசத்தை தாண்டி தகுதிச்சான்று புதுப்பிக்காமல் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தகுதிச்சான்றை புதுப்பிக்காத வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். அதன் பேரில் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் குன்றத்தூர் பகுதியில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்த 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Related Tags :
Next Story