ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு


ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 May 2022 2:20 PM IST (Updated: 3 May 2022 2:20 PM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

வண்டலூர்,  

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார்.

இந்த முகாமிற்கு காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பரணிதரன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் வி.எஸ்.ஆராமுதன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற செயலர் கருணாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story