ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது


ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
x
தினத்தந்தி 3 May 2022 8:42 PM IST (Updated: 3 May 2022 8:42 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது


கோவை

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவையில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகை

முஸ்லிம்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் தங்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை கடைபிடிக்கிறார்கள். 

ரமலான் மாதத்தில் பிறை தோன்றும் நாளில் இருந்து முஸ்லிம்கள் நோன்பு தொடங்கு கின்றனர். 

அதன்படி இந்த ஆண்டிற்கான நோன்பு கடந்த மாதம் 3-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. 

முஸ்லிம்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடினர்.

சிறப்பு தொழுகை

 ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை பூ மார்க்கெட் ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசல், கரும்பு கடை தனியார் பள்ளி மைதானம், 

ஆர்.எஸ்.புரம் குர்ரத்துல் ஜன் பள்ளி வாசல், கவுண்டம்பாளையம் மஸ்ஜிதே நூர் பள்ளி வாசல், ஒப்பணக்கார வீதி பள்ளிவாசல் போத்தனூர் நூர் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ளி பள்ளி வாசல்களில் நேற்று காலை முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

 ரம்ஜான் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரி வித்து மகிழ்ந்தனர்.

வாழ்த்து

மேலும் தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நேரிலும், தொலைபேசியிலும்  ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் ரம்ஜான் தொழுகை நடைபெறவில்லை. 

2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்ற தொழுகையில் முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  

ரம்ஜான் பண்டிகை யையொட்டி பள்ளிவாசல்கள் உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

 ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட இடங்களில் பெண்கள் தனியாக சிறப்பு தொழுகை நடத்தினர்.


Next Story