ரேஷன் பொருட்களை விற்றால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்


ரேஷன் பொருட்களை விற்றால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்
x
தினத்தந்தி 3 May 2022 8:47 PM IST (Updated: 3 May 2022 8:47 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் பொருட்களை விற்றால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்


கோவை

ரேஷன் பொருட்களை விற்றால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

தவிர்க்க வேண்டும்

கோவை மவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது

பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளை முழுமையாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் 

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கை ரேகை சரிபார்ப்பு தொழில்நுட்பம் (பயோமெட்ரிக்) வாயிலாக விபரங்கள் சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த முறையானது கடந்த 1.10.2020 முதல் நடைமுறையில் உள்ளது.

எனவே ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நேரில் சென்று பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 

குடும்ப உறுப்பினர் அல்லாத பிற நபர்களிடம் ஸ்மார்ட் கார்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

கைரேகை புதுப்பிப்பு

ரேஷன் கடைக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும் 

தங்களது ரேஷன் கார்டுக்கு பொருட்களை பெற ஒரு நபரை அங்கீகரித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மூலம் வழங்கப்படும் அங்கீகார சான்று மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். 

ஒரு சிலருக்கு கைரேகை பதிவாகவில்லை என்றால் ஆதார் மையங்களுக்கு சென்று தங்களது கைரேகையை புதுப்பித்து கொள்ள வேண்டும். 

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களை பிறருக்கு விற்பனை செய்வது குற்றமாகும்.

ஸ்மார்ட் கார்டு ரத்து
இதனால் பொதுவினியோக திட்ட பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்ய வழிவகுக்கும். எனவே ரேஷன் பொருட்களை வாங்கி பிறருக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்களின் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story