ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை
பொள்ளாச்சி பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி பெரிய பள்ளி வாசல் சார்பில் தேர்நிலை திடல் பகுதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு காலை 9 மணிக்கு இமாம் மன்சூர் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று சூளேஸ்வரன்பட்டி, கோட்டூர் ரோடு குமரன் நகர், மார்க்கெட் ரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மேலும் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story