ஓசூர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில தொழிலாளி கைது


ஓசூர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 May 2022 10:31 PM IST (Updated: 3 May 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

ஓசூர்:
உத்தரபிரதேச மாநிலம் மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரபலி (வயது42). கூலித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அச்சந்திரம் கிராமத்தில், விவசாய தோட்டங்களில் காய்கறிகளை சுத்தம் செய்யும் கூலி வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சந்திரபலி மது போதையில் நண்பரின் வீட்டுக்கு சென்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ஓசூர் மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தொழிலாளி சந்திரபலியை  போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Next Story