குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ60 ஆயிரம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ஓசூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரிடு
குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ஓசூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறைந்த வட்டிக்கு கடன்
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள பெலத்தூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 40). இவரிடம் ஓசூரில் சிலர் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக குறிப்பிட்டு இருந்தனர்.
இதைத் தொடர்ந்து மஞ்சுளா அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், குறைந்த வட்டியில் தான் முத்ரா பைனான்ஸ் திட்டத்தில் கடன் வாங்கி பணம் தருவதாக கூறினார்.
ரூ.60 ஆயிரம் மோசடி
இதற்காக விண்ணப்ப கட்டணம், நடைமுறை செலவுகள் உள்ளிட்டவற்றிற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறினார். அதை நம்பி மஞ்சுளா ரூ.60 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட நபர், எந்த கடன் வசதியும் செய்து கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார்.
இந்த மோசடி குறித்து மஞ்சுளா கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story