பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறதா?
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுகிறதா? என கோவை கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
சுல்தான்பேட்டை
கலெக்டர் ஆய்வு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சுமார் 15 ஆயிரத்து 600 ஏக்கர் விளைநிலங்கள் பி.ஏ.பி. பாசன திட்டத்தில் பயனடைகிறது. இந்த பாசன நீரைக் கொண்டு தென்னை மற்றும் காய்கறி பயிர்கள், மக்காச்சோளம், வெங்காயம் போன்றவற்றுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
இதற்கிடையே சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் சிலர் சட்ட விரோதமாக தண்ணீர் திருடினர்.
இதனால் கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இந்தநிலையில் கோவை கலெக்டர் சமீரன் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பூராண்டாம் பாளையம், மலைப்பாளையம் பகுதிகளில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலை நேரில் பார்வையிட்டு திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக யாரும் சிக்கவில்லை.
கடும் நடவடிக்கை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருடிய 27 பேர் பிடிபட்டனர். அவர்களது மின் இணைப்புகள் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின்போது தெற்கு ஆர்.டி.ஓ. இளங்கோ, சூலூர் தாசில்தார் சுகுணா, பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ரவி, உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்காலில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். எனவே, யாரும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என்றனர்.
Related Tags :
Next Story