கோவையில் ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவையில் ஒப்பந்த நர்சுகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை
கோவை எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமலட்சுமி தலைமை தாங்கி கூறியதாவது:-
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காலத்தின் போது நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா சிகிச்சை பணிகளை மேற்கொண்டோம்.
பணி நியமனத்தின் போது 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலும் அதன்பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் கடந்த பின்னரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
கடந்த 2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஏராளமான ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதேபோல் தற்போதைய முதல்-அமைச்சரும் நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story