வெயிலின் தாக்கம் குறைந்தது; இரவில் வெளுத்து வாங்கிய மழை


வெயிலின் தாக்கம் குறைந்தது; இரவில் வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 4 May 2022 11:39 PM IST (Updated: 4 May 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளில் வெயிலின் தாக்கம் குறைந்தது. இரவில் மழை வெளுத்து வாங்கியது.

தேனி: 


அக்னி வெயில்
தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் 98 டிகிரி அளவில் வெயில் வாட்டி வதைத்தது. கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளில் பகல் நேரத்தில் வெப்பசலனமாக காணப்பட்டது.

அதேநேரத்தில் வானில் கார்மேகங்கள் திரண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்தது. மேகங்களில் மறைந்தே மாலை வரை சூரியன் பயணப்பட்டதால் தேனியில் வெயிலின் தாக்கம் 96 டிகிரி அளவில் இருந்தது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும் போது வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. வெப்ப சலனத்தை உணரும் போது மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

வெளுத்து வாங்கிய மழை
ஆனால், மாலை நேரத்தில் லேசான சாரல் மழை சில நிமிடங்கள் தூரத் தொடங்கிய வேகத்தில் நின்று போனது. இருப்பினும் மாலையில் குளிர்ந்த காற்று வீசியதால், பகலில் நிலவிய வெப்பசலனத்தின் தாக்கம் தணிந்து போனது.

இந்நிலையில் இரவு 8 மணியளவில் தேனியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 1 மணி நேரத்துக்கும் மேல் இந்த மழை நீடித்தது. வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
முதல் நாளில் கருணை காட்டிய கத்திரி வெயிலின் தாக்கம் இனி வரும் காலங்களில் மழையின் துணையோடு நீடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story