செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறும்- கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10 மணி முதல் மதியம் 2 மணிவரை செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story