திருவாரூர் மாவட்டத்தில் 12,905 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 12,905 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுதினர். 551 பேர் தேர்வுக்கு வரவில்லை.
திருவாரூர்:-
திருவாரூர் மாவட்டத்தில் 12,905 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுதினர். 551 பேர் தேர்வுக்கு வரவில்லை.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 120 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 178 மாணவர்கள், 7 ஆயிரத்து 278 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 456 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்ட 57 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருவாரூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு பணிக்காக 1,238 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
மேலும் 60 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, முறைகேடுகள் நடக்கிறதா? என கண்காணிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. காப்பி அடித்தல், அனுமதிக்கப்படாத துண்டு சீட்டுகள் எடுத்து செல்லுதல் போன்ற ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
முதல்நாள் தேர்வில் 5 ஆயிரத்து 882 மாணவர்கள், 7 ஆயிரத்து 23 மாணவிகள் என மொத்தம் 12,905 பேர் தேர்வு எழுதினர். 551 பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை.
Related Tags :
Next Story