தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் புகுந்து தங்கம், வெள்ளி பொருட்கள் திருட்டு திருட்டு போனது தெரியவந்தது.
திருவள்ளூரை அடுத்த சிறுவனூர் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 33). இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவாலங்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டிவி ஒன்றும் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ரமேஷ் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story