கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
கோவை
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், காளிதாஸ், மகாலட்சுமி, கார்த்திக், ஆலோசகர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கி பொதுச் செயலாளர் கந்தசாமி கூறுகையில்,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக செயல்படுகிறார்கள்.
கலெக்டர் சமீரன் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மாதந்தோறும் கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
அதை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
Related Tags :
Next Story