பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் 30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்


பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் 30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 5 May 2022 7:42 PM IST (Updated: 5 May 2022 7:42 PM IST)
t-max-icont-min-icon

பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் 30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்


சிங்காநல்லூர்

பையில் இரிடியம் இருப்பதாக கூறி செங்கல் கொடுத்து காண்டிராக் டரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

கட்டிட காண்டிராக்டர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது60). கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்யும் காண்டிராக்டர். 

இவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பு மூலம் 2 பேர் அறிமுகம் ஆனார்கள்.

அவர்கள் மனோகரனிடம், எங்களிடம் உள்ள ரூ.1 கோடி மதிப்பி லான இரிடியத்தை ரூ.30 லட்சத்துக்கு கொடுப்பதாக கூறி உள்ளனர். 

அவர்களின் பேச்சில் மயங்கிய மனோகரன் ரூ.30 லட்சம் கொடுத்து இரிடியத்தை வாங்க ஆசைப்பட்டுள்ளார்.

ரூ.30 லட்சம்

இதையடுத்து அவரிடம் செல்போனில் பேசிய நபர்கள் கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வருமாறு கூறி உள்ளனர். 

அதை நம்பிய மனோகரன் தேனியில் இருந்து கடந்த மாதம் 18-ந் தேதி கோவை சிங்காநல்லூர் வந்து அங்குள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் அவர், அந்த நபர்களை தொடர்பு கொண்டு ரூ.30 லட்சத்துடன் கோவை வந்த தகவலை தெரிவித்தார். உடனே அங்கு 3 பேர் வந்தனர்.


அவர்கள் தங்களின் கையில் உள்ள பையில் விலை உயர்ந்த இரிடியம் உள்ளதாகவும், அதை பூஜை செய்து வைத்திருப்பதாகவும், உடனே திறந்து பார்க்க வேண்டாம் என்று கூறி மனோகரனிடம் கொடுத்தனர்.

செங்கல் இருந்தது

அதை வாங்கிய மனோகரன், அவர்களிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்து உள்ளார். அதை வாங்கிய உடன் அவர்கள் 3 பேரும் வேகமாக சென்று விட்டனர். 

இதையடுத்து மனோகரன் அந்த பையை திறந்து பார்த்தார். 
அதற்குள் ஒரு செங்கல் இருந்துள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

3 பேர் சிக்கினர்

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிக ளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசார ணையில், 

மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டம் ஆண்டிப்பட் டியை சேர்ந்த கார் டிரைவர் வேலுசாமி (27), அவரது நண்பர்களான தேனியைச் சேர்ந்த நிர்மல் செல்வன் மற்றும் வினோத் குமார் என்பது தெரியவந்தது. 

ரூ.7.5 லட்சம் பறிமுதல்

உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ 7.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.   இதையடுத்து அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


விசாரணையில், இந்த மோசடிக்கு வேலுசாமி மூளையாக செயல் பட்டு உள்ளார். ஒரே பகுதியைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும் மனோகரனை கோவைக்கு வரவழைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

அவர்கள் இதுபோன்று வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story