கோவை அருகே மது குடித்து விட்டு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், கார் மீது மோதியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
கோவை அருகே மது குடித்து விட்டு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், கார் மீது மோதியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்
துடியலூர்
கோவை அருகே மது குடித்து விட்டு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், கார் மீது மோதியதால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அரசு பஸ் டிரைவர்
கோவை காந்திபுரத்தில் இருந்து துடியலூர் நோக்கி அரசு பஸ் சை டிரைவர் ரகு என்பவர் ஓட்டி சென்றார்.
அவர், பஸ்சை எடுத்ததில் இருந்து தாறுமாறாக ஓட்டி உள்ளார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
இந்த நிலையில் அந்த பஸ் ஜி.என்.மில்ஸ் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பஸ் மற்றும் காரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
கார் சேதம்
ஆனாலும் அரசு பஸ் மோதியதால் காரில் இருந்தவர்கள் இறங்கி வந்து டிரைவர் ரகுவிடம் விசாரித்தனர். அப்போது அவர் மது குடித்து விட்டு பஸ்சை ஓட்டியது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் பயணிகள் ஒன்று சேர்ந்து டிரைவர் ரகுவை பஸ்சில் இருந்து இறங்க வைத்தனர்.
அப்போது போதையில் இருந்த டிரைவர் ரகு காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்து கொடுக்கிறேன். 2 நாள் அவகாசம் கொடுங்கள். வழக்கு எதுவும் போட வேண்டாம் என்று கெஞ்சினார்.
போலீசில் ஒப்படைப்பு
ஆனால் போதையில் இருந்த டிரைவர் ரகு தொடர்ந்து அரசு பஸ்சை இயக்க கூடாது என்று பயணிகள் கூறினர்.
இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், டிரைவர் ரகுவை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவர் ரகுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர் மது குடித்து உள்ளாரா என பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர் மது குடித்தது உறுதியானது. இதை யடுத்து அரசு பஸ் டிரைவர் ரகு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பயணிகள் இருந்த அரசு பஸ்சை குடிபோதையில் டிரைவர் ஓட்டி சென்று கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story