பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்- 2 தேர்வை 4,517 பேர் எழுதினார்கள்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 4 ஆயிரத்து 517 பேர் எழுதினார்கள். தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் பேட்டி அளித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 4 ஆயிரத்து 517 பேர் எழுதினார்கள். தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் பேட்டி அளித்தனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 2 ஆயிரத்து 118 பேரும், மாணவிகள் 2 ஆயிரத்து 748 பேரும் சேர்த்து 4 ஆயித்து 866 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் மாணவர்கள் 1,998 பேரும், மாணவிகள் 2,579 பேரும் சேர்த்து 4 ஆயிரத்து 517 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்கள் 120 பேரும், மாணவிகள் 169 பேரும் சேர்த்து 289 பேர் தேர்வு எழுத வரவில்லை.
மாற்றுத்திறனாளிகள் 25 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 24 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்கள் பிளஸ்-2 தேர்வு எழுத வித்ய நேத்ரா பள்ளியில் தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் எடுத்து சென்றனர்.
கல்வி அதிகாரி ஆய்வு
தேர்வர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 34 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 392 பேரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதை தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 36 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும்படையினர் அவ்வப்போது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்தனர். இது தவிர அந்தந்த தேர்வு மையங்களில் நிலையான பறக்கும்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு வர கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொண்ட வாசகங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் மாணவ-மாணவிகள் எழுதுவதை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி ராஜசேகரன் ஆய்வு செய்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
தேர்வு எளிதாக இருந்தது
தேர்வு மையத்திற்கு செல்லும் முன் ஒருவித பயம் இருந்தது. வினாத்தாள் எப்படி இருக்குமோ? என்று நினைத்தோம். ஆனால் தமிழ் முதல் தாளில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிதாக இருந்தது. ஏற்கனவே பள்ளிகளில் எழுதிய தேர்வுகளில் கேட்கப்பட்டு இருந்த கேள்விகள் அதிகம் இருந்தன. பாடபுத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் இருந்ததால், அனைத்து கேள்விக்களுக்கும் விடை அளிக்க முடிந்தது. இதுபோன்று மற்ற அனைத்து தேர்வுகளும் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதேபோல் வால்பாறை பகுதியில் உள்ள 3 தனியார் மேல்நிலை பள்ளி, 4 அரசு மேல்நிலை பள்ளி உட்பட மொத்தம் 7 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 4 மையங்களில் பிளஸ் - 2 அரசு பொதுத் தேர்வு எழுதினார்கள். தேர்வுகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். மொத்தமுள்ள 524 பேரில் நேற்று 23 பேர் தேர்வு எழுதவரவில்லை. 501 பேர் தேர்வு எழுதினார்கள்.வால்பாறையில் தேர்வு மையங்களில் 4 மாற்றுத்திறனாளி மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். வால்பாறை அரசு மேல்நிலை பள்ளி தேர்வு எழுதும் மையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story