கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது.
இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி தேதி இரவில் 10 பேர் கும்பல் உள்ளே புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா உதவியாளர்
இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இதுவரை 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட் டது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக கோவை அவினாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி வளாகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அ.தி.முக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது முறையாக தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.
கைதானவரின் சகோதரர்
இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் கைதான கேரளாவை சேர்ந்த பிஜின் குட்டி என்பவரின் சகோதரர் மோசசிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர்.
போலீசார் இந்த வழக்கு தொடர் பாக செல்போன் எண்களை ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடநாடு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த வழக்கில் ஏற்கனவே கைதான பிஜின் குட்டி சகோதரர் மோசசின் செல்போன் எண்ணுக்கு சிலர் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது.
எனவே பிஜின் குட்டியின் சகோதரர் மோசசிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை
கோடநாடு விவகாரம் தொடர்பாக யாரேனும் அவரை சந்தித்து பேசி உள்ளனரா? கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஏதேனும் தெரியுமா? என்பன போன்ற கேள்விகளை கேட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் பிஜின் குட்டியிடம் ஏற்கனவே நீலகிரியில் 2 முறையும், கோவையில் ஒரு முறையும் விசாரணை நடைபெற்று உள்ளது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரரிடம் விசாரணை நடைபெற்று வருவது குறிப் பிடத்தக்கது.
மேலும் அவர் விசாரணைக்கு ஆஜராக வந்தபோது அவருடன் மேலும் 2 பேர் வந்தனர். அவர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story