வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது


வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது
x
தினத்தந்தி 5 May 2022 9:05 PM IST (Updated: 5 May 2022 9:05 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டது



சரவணம்பட்டி

கோவையை அடுத்த வெள்ளானைப்பட்டி ஊராட்சி பகுதியில் தனியார் பஞ்சு மில் உள்ளது. இங்கு  பகல் ஒரு மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் தீ வேகமாக பரவி பஞ்சு மூட்டைகளில் பற்றி எரிந்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மில்லில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மதிய நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனை வரும் சாப்பிட சென்று இருந்தனர்.

 இதனால் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. இதை அறிந்த கோவில்பா ளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத் திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

Next Story