வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கருமத்தம்பட்டி
கஞ்சா, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்ப தற்காக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராய ணன் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் கோவை - திருச்சி ரோடு காங்கேயம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, அன்னலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு திடீரென்று சோதனை நடத்தினர்.
இதில், அந்த வீட்டில் ஒரு பெண் கஞ்சா வை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மனைவி ஜெயபாண்டியம்மாள் (வயது 30) என்பதும்,
அவர் கணவரை பிரிந்து திருப்பூர் மாவட்டம் இச்சுப்பட்டியில் கஞ்சா விற்றதும், அன்னலட்சுமி நகரில் வீட்டில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயபாண்டியம்மாள் கைது செய்யப்பட்டார். அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story