தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 May 2022 10:39 PM IST (Updated: 5 May 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-



ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்புறம் சாலையோரங்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளார்கள். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற முனவர வேண்டும்.

மணிகண்டன், ராமநாதபுரம்.

  
  
  
தேங்கி நிற்கும் கழிவுநீர் 

  கோவை குறிச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் முகம் சுழிக்கிறார்கள். குறிப்பாக சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதேபோல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சதீஸ், குறிச்சி.
  
  

தண்ணீர் திருட்டு

  சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் விவசாயத்திற்கு உறுதுணையாக பி.ஏ.பி. பாசனம் உள்ளது. இந்த வாய்க்காலில் சிலர் சட்டவிரோதமாக தண்ணீர் திருடி லாரிகளில் கட்டுமானப் பணிக்கும், தொழிற்சாலை பணிக்கும் அனுப்புகின்றனர். இதனால் கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே சிறு குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இப்பிரச்னைக்கு தீர்வுகாண அதிகாரிகள் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

  கருப்பசாமி, சுல்தான்பேட்டை.

  
பஸ்கள் செல்லுமா?

  கோவை சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு 5,5ஏ,5டி, 14 மற்றும் நகர்ப்புற பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் கருமத்தம்பட்டி மற்றும நால்ரோடு பகுதியில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மாற்றுப் பஸ்களில் ஏறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே கருமத்தம்பட்டி மற்றும நால்ரோட்டில் இருந்து பஸ்கள் செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  மணி, சோமனூர்.
  
  
குவிந்து கிடக்கும் குப்பைகள்

  நெகமம் தாராபுரம் ரோட்டில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், சாலையோரமாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதேபோல் 2 சக்கர வாகனங்களில் வருபவர்களின் கண்களில் குப்பைகளில் இருந்து தூசுகள் பறந்து படுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறும் நிலை ஏற்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற முனவர வேண்டும்.

  சண்முக வடிவேலன், நெகமம்.
  
பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

  கோவை பிரிமியர் நகர் முதல் கோவில்மேடு வரை 12பி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கற்பகம் கல்லூரி முதல் துடியலூர் வரை 4ஏ பஸ் இயக்கப்பட்டது. இந்த 2 பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பூமார்க்கெட், வடகோவை, உக்கடம், ஆத்துப்பாலம் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மாணவ-மாணவிகள் வெவ்ேவறு பஸ்களில் ஏறி பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.

  பாத்தீமா பீவி, கோவை.
  
  
  தண்ணீர் தட்டுப்பாடு

  கோவை போத்தனூர் சாரதா மில் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக உப்புதண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாரதா மில் பகுதிக்கு உப்புத்தண்ணீர் வர ஆவன செய்ய வேண்டும்.

  ஜெயா, போத்தனூர்.
  
  
மாணவ-மாணவிகள் அச்சம்


  கோவை சூலூர் ரெயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, தாலுகா அலுவலகம் அருகில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு சாலையோரமாக படுத்துகிடக்கிறார்கள். குறிப்பாக கண்டஅய்யர் வீதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் மதுஅருந்திவிட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரமாக நடந்து செல்ல மாணவ-மாணவிகளிடம் அத்துமீறுகிறார்கள். இதனால் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக பெண்களையும் கேலி செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடித்துவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் மதுப்பிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சஞ்சீவ், சூலூர்.
  
  வார்டு விபரங்கள் வேண்டும்

  கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட வார்டுகள் நடந்து முடிந்்த உள்ளாட்சி தேர்தலின் போது மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பழைய வார்டு எண்ணிலேயே பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைகிறார்கள். அதனால் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வீதிகளில் வார்டு விபரங்களை தெரிவிக்கும் வகையில் பெயர் பலகையில் குறிப்பிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுபார்களா?.
  ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
  
  
  
  
  
  


Next Story