காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 184.55 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 79 இடங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.
இந்த நிலையங்களை கண்காணிக்க வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் நாள்தோறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு இணையவழி பதிவு முறை டோக்கன் வரிசைபடி நெல் கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும்,
இடைத்தரகர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகளில் தலையீடு செய்வதை கண்காணிப்பதுடன் உரிய அறிக்கையினை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story