பள்ளிப்பட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.84 லட்சம் திட்ட பணிகளுக்கு ஒப்புதல்
பள்ளிப்பட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் ரூ.84 லட்சம் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பள்ளிப்பட்டு ஊராட்சியில் 7 மாதங்களாக ஒன்றிய குழு கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பல செலவின தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக ரூ.84 லட்சத்தில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சூரராஜ்பட்டடை, கரிம்பேடு, நெடியம், சாமந்தவாடா உள்பட பல பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து திட்ட பணிகள் மேற்கொள்ள ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கரிம்பேடு ரவி, பாரதி, முத்து ரெட்டி, முத்துராமன், நதியா நாகராஜன், சுகுணா நாகவேல், உஷா ஸ்டாலின், புஷ்பா பாஸ்கர், பத்மா கோவிந்தராஜ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story