திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயம்


திருவள்ளூரில் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயம்
x
தினத்தந்தி 6 May 2022 6:26 PM IST (Updated: 6 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயமானது தொடர்பாக போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பணம் மாயம்

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் பிரேம்நாத் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் திருவள்ளூர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக அவருடன் பணிபுரியும் ஊழியர்களான ரவிச்சந்திரன், மோகன் குமார் ஆகிய 2 பேரும் ரூ.95 லட்சத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்பிய பிறகு ரூ.5 லட்சம் குறைவாக உள்ளது என மேலாளரிடம் கூறியுள்ளனர். அந்தப் பணம் எப்படி மாயமானது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

2 பேர் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் பிரேம்நாத் நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் பணத்தை வங்கியில் நிரப்ப எடுத்து சென்ற ஊழியர்கள் ரவிச்சந்திரன், மோகன்குமார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story