கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்


கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட  60 பேர் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 6 May 2022 7:16 PM IST (Updated: 6 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர்


கோவை

தென்னக ரெயில்வே பணிக்கான தேர்வு எழுத தமிழக மாணவர் கள் வடமாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்ற 

தென்னக ரெயில்வேயின் அறிவிப்பை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 

இதில் கலந்து கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 60 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

முன்னதாக   கு.ராமகிருஷ்ணன் கூறும்போது, தென்னக ெரயில்வேயில் 2,500 அலுவலக காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னை தேர்வாணையம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வை அறிவித்தது. 

முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அடுத்த கட்ட தேர்வை வருகிற 9, 10-ந் தேதிகளில் வடமாநிலங்களுக்கு சென்று எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இதனால் போக்குவரத்து செலவு அதிகரிக்கும். எனவே தமிழகத்திலேயே தேர்வை நடத்த வேண்டும் என்றார்.


Next Story