வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு
ஆனைமலை
ஆனைமலை நெல்லுகுத்திபாறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மாடி வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருபவர் சந்திரசேகர். தபால்காரர். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மெட்டுவாவி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார். இதை அறிந்த மர்ம ஆசாமிகள், அவரின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இந்தநிலையில் திருவிழாைவ முடித்துவிட்டு சந்திரசேகர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்து பணம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story