பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் மத்திய மந்திரிகள் ஆய்வு
பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் மத்திய மந்திரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே தென்னை நார் தொழிற்சாலையில் மத்திய மந்திரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய மந்திரிகள் ஆய்வு
பொள்ளாச்சி அருகே மத்திய அரசின் கயிறு வாரியத்தின் குழுமம் செயல்பட்டு வருகிறது. இங்கு கால் மிதி, ஜியோ டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தென்னை நார் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி கயிறு குழுமத்தை மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே, இணை மந்திரி பானு பிரதாப் சிங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தென்னை நாரில் இருந்து கால் மிதி தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது கன்டெய்னர் தட்டுப்பாட்டால் தென்னை நார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கன்டெய்னர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் கயிறு வாரிய குழும நிர்வாகிகள் வலியுறுத்தினர். அப்போது கயிறு வாரிய தலைவர் குப்புராம் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி கயிறு வாரிய குழுமத்தினர் கூறியதாவது:-
ஏற்றுமதி பாதிப்பு
பொள்ளாச்சி கயிறு குழுமம் ரூ.6 கோடியே 50 லட்சம் மானியத்துடன் ரூ.8 கோடியே 88 லட்சம் திட்ட செலவில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தரை விரிப்பு, நால் வலை, கயிறு மிதியடி பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதுவரை இந்த குழுமம் மூலம் ரூ.32 கோடியே 33 லட்சம் வருவாய் ஈட்டி உள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டில் மட்டும் ரூ.15 கோடியே 16 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, இத்தாலி நாடுகளுக்கு கால் மிதி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கன்டெய்னர் பற்றாக்குறை காரணமாக தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கயிறு பொருட்கள், தென்னை மட்டை, நார் பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. எனவே மத்திய அரசு கன்டெய்னர் வசதியை உடனடியாக ஏற்படுத்தி தர மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவர் இலங்கையில் பொருளாதார பிரச்சினை, சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்காலிகமாக அதற்கான வசதியை ஏற்படுத்தி தர முடியவில்லை. இந்த பிரச்சினைகள் முடிந்ததும் கன்டெய்னர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story